சென்னை, மார்ச் 7- “கடந்த இரண்டாண்டுகளில் 11,306 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள் ளது. இதில் தொடர்புடைய 6,124 பேரின் வங்கிக் கணக்கு கள் மற்றும் ரூ. 18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு காவல்துறை விளக்கம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நட வடிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆகி யோர் வியாழனன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந் தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்றவர்களின் ரூ. 18 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 11,306 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவ லில் வைக்கப்பட்டுள்ளனர்.
2024-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி வரை போதைப்பொருள் வழக்குகளில் தொடர்பு டைய 25 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தடுப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டுள் ளது.
மருந்துகளை போதைப்பொருளாக பயன்படுத்து வதை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது போதைப்பொருள் கடத்தல் குறைந் துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 2 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். அனைத்துக் கல்வி நிறு வனங்களிலும் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.