tamilnadu

img

இயல் இசை நாடகமன்ற உறுப்பினர் நியமனம்.... சென்னையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கடும் எதிர்ப்பு....

சென்னை:
இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலராக டி.சோமசுந்தரம் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (அக. 23) சென்னையில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தின் தலைவராக அண்மையில் திரைக்கலைஞர் வாகை சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர் செயலராக டி.சோமசுந்தரம் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.  அதிமுக ஆட்சி காலத்தில் தகுதியற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கலைமாமணி விருதுக்கு இவர் பரிந்துரைத் துள்ளார். நாட்டுப்புறக் கலைஞர் கோவிந்தராஜ், லஞ்சம் கொடுக்க மறுத்ததால், மரக்காலாட்டம் என்ற ஒரு கலையே இல்லை என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதிகாரிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சாதிய, மத அமைப்புகளில் உறுப்பினராக உள்ளதோடு, கலைஞர்களிடம் வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார். அதிமுக, பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு வருபவருக்கு உறுப்பினர் செயலர் வழங்கியதை ஏற்க முடியாது. எனவே, சோமசுந்தரம் நியமனத்தை ரத்து செய்யக்கோரி மாற்று ஊடக மையம், அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தின் போது  மாற்று ஊடகமையத்தின் நிர்வாகி பேரா.இரா.காளீஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் 7 லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். ஆனால் வாரியத்தில் சுமார் 40 ஆயிரம் பேர்தான் உறுப்பினர்களாக உள்ளனர். அரசின் திட்டங்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சோமசுந்தரம் என்ற தவறான நபர் அமர்த்தப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு கலைமாமணி விருதுகள் விற்கப் பட்டன. அதற்கு புரோக்கராக இருந்தவர் சோமசுந்தரம். கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில், லஞ்சம் தராததால் அந்த விருதையே சோமசுந்தரம் நிறுத்தி வைத்தார். தருமபுரியில் 100 நாட்கள் தெருக் கூத்து கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்திவிட்டு, அவர்களுக்கு உதவித் தொகையை தராமல் ஏமாற்றியுள்ளார்.கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நல
வாரியத்தை அதிமுக ஆட்சியில் முடக்கியவர் சோமசுந்தரம். அத்தகையவரை வெளிப் படையாக அறிவிக்காமல், ரகசியமாக நியமித்து பதவியேற்பு செய்ய வைத்தது ஏன்?
நாட்டுப்புற கலைஞர்களின் விரோதியாக செயல்படுகிற சோமசுந்தரத்தை உறுப்பினர் செயலராக நியமித்ததை கண்டித்து 70 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட் டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

;