சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அந்நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர் தரப்பாக வாதிட
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆலை மூடல் தொடர் பான வழக்கிலும் வாதாட சிபிஎம் தாக்கல் செய்த மனு அனுமதிக்கப்பட்டிருப்பது மற்றுமொரு வெற்றியாகும்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை வரும் ஜுன் 20ஆம் தேதி விசாரிப்ப தாக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்புடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வைகோ, பாத்திமாபாபு, மக்கள் அதிகாரம், ஹரிராவ், ராஜி ஆகியோரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்த னர். இந்த மனுக்களை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இது தவிர 10 ரிட் மனுக்கள் மற்றும் சுமார் 200 இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 உயிர்களைப்பறித்த துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழல் மாசுபட்டது. இரசாயன கழிவுகள் மற்றும் நச்சுக்காற்றால் பொது மக்களும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டனர். ஆலையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அந்த பகுதி மக்க ளும் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 22.5.2018 அன்று பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க முயன்றனர். அப்போது போராட்டத்தை சீர்குலைத்த காவல் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மட்டுமல்லா மல் தமிழகம் முழுவதும் கொந்த ளிப்பான சூழல் ஏற்பட்டது.
29.5.2018 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஐ காவல்துறையினரிடம் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணையை துவக்கிய சிபிஐ, தூத்துக்குடி காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கையே அடிப்படையாக எடுத்துக்கொண் டது. ஆனால் சிபிஎம் அளித்த விரிவான புகார் மனு மீது புதிய வழக்குபதிவு செய்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேறு அமர்வுக்கு மாற்றம்
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைத்து தமிழகஅரசு அர சாணை வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்தும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க
அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசா ரித்தது. விசாரணையின் போது ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். தற்போது நீதிபதி சத்தியநாராயணன் மதுரைக் கிளையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரிய இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா அடங்கிய அமர்வில் செவ்வாயன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந் தது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்தபோது சில உத்தரவு களை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். மேலும் வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை தரப்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த விசாரணை யில் சிபிஎம் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் பர்வீன்பானு, சாஜி செல்லன், சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் ஆஜரா கினர்.