tamilnadu

img

அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா: 26 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

அம்பத்தூர், ஜன. 14- சென்னை அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 26 ஆம் விளையாட்டு விழா பள்ளியின் முதல்வர் எஸ்.வல்லபன் தலைமையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச தடகள வீரர் நிவ்யா ராஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். தேசிய அளவில் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மோனிகா, ஸ்ருதிகா, துப்பாக்கி சுடுதலில் வெற்றிபெற்ற மாணவிகள் அநன்யா, அம்ரிதா, செஸ் போட்டியில் வெற்றி பெற்ற ரித்திகா, நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மோகித் மற்றும் ரித்திக், ஸ்ருதி ஆகியோர் விளையாட்டுப் போட்டியின் ஜோதியை ஏற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு, ரன்னிங்ரேஸ், தொடர் ஓட்டம், பந்து எரிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தடகள வீரர் நிவ்யா ராஜா, முதல்வர் வல்லபன் ஆகி யோர் பரிசுகளை வழங்கி உரையாற்றினர். முன்னதாக மாணவர்கள் நிகழ்த்திய யோகா, வழுக்கு மரத்தில் வீரசாதனை, கயிற்றில் தொங்கியபடி செய்த வீரசாகசம், ஸ்கேட்டிங், பாரம்பரிய விளையாட்டான கம்பு சுற்றுதல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜே.உமா, ஜோதி, புஷ்பராஜ், எஸ்.குண சீலன், ஏ.அன்புச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

;