tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேராசிரியர்கள் சி. சுப்பிரமணியன், அசோகன், முத்து வேலாயுதம், செல்லபாலு, தனசேகரன், காயத்ரி, பரணி, ஜான் கிறிஸ்டி உள்ளிட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். தினக் கூலி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, பல்கலைக்கழக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆராய்ச்சி படிப்புக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும், 2 விழுக்காடு அகவிலைப்படி வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பயன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.