சென்னை, நவ.10- தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்பு மணி ராமதாசு, “தந்தை பெரியார் மண். பெரியார் இல்லை என்றால் சமூக நீதி இல்லை. அவர் தான் சமூக நீதியை இந்தியாவில் தொடங்கி வைத்தார். அடித்தள மக்கள் எல்லாம் முன்னுக்கு வர காரணமானவர். பெரியார் பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சியோ இழி வாக பேசக்கூடாது. பாமக முன் னோடிகள் 3 பேர்கள், அவர்கள் தந்தை பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் பற்றி தவறாக பேசினால் சும்மா இருக்க மாட்டோம்”என்றார்.
தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசு மோதல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இப்போது இருக்கிறது. ஆளுநர் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தமிழகத்திற்கு பாதிப்பு”என்றார்.
ஆளுநர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும் நீதிபதிகள் எப்படி இருக்கிறார்களோ குடியரசுத் தலைவர் எப்படி இருக்கிறாரோ அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும். ஆளுநர் அரசியல் பேசா மல் இருக்க வேண்டும். ஆளுநர் என்பவர் அவர் சார்ந்த கட்சியையோ கொள்கை முடிவை வெளியிட கூடாது என்றும் அவர் கூறினார்.