சனாதனம் குறித்து பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மூன்று பேர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அப் பதவியிலி ருந்து நீக்க உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு அக்டோபர் 17 அன்று விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் ஆஜராகி வாதாடினார்.
இது தொடர்பாக அடுத்த நாள் ஊடகங்க ளில் வெளியான செய்திகளில் “சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்து தனிப்பட்ட ஒன்று; அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை” என வழக்கறிஞர் வாதிட்டதாக குறிப்பிடப்பட்டிருந் தது. ஆனால் உண்மையில் பதில் மனு தாக்கல் செய்த அமைச்சர் உதயநிதி அவர்களோ, அவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களோ அப்படி குறிப்பிடவில்லை. ஆனால் முற்றிலும் முரணான தகவல் ஊடகவியலாளர் கள் என்ற பெயரில் சிலரால் பகிரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்துத்துவா நபர்கள் உலவ விடப்பட்டுள்ளார்கள் என்ற தக வல்களும், அமைச்சர் உதயநிதிக்கு எதிரான மேற்கண்ட முரண்பட்ட செய்தியும் ஒன்றுக்கொன்று இயைந்து செல்கின்றன என்பதை உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம்.
மாறாக, அந்த பதில் மனுவில், அமைச்சர் உதயநிதி சார்பில் வழக்கறிஞர் வில்சன் எடுத்து வைத்த வாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை:
“நீதிமன்றங்கள், அரசியல், தத்துவார்த்த அல்லது இறையியல் கேள்விகள் குறித்து பதில ளிக்க முடியாது என்பது ஏற்கெனவே தீர்க்கப்பட்ட ஒன்று. அமைச்சர் உதயநிதி எந்த மதத்தையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் பேசவில்லை. அதே வேளையில் பகுத்தறிவற்ற நம்பிக்கைக ளைப் பற்றியும், மதத்தின் பெயரால் சமூகத்தில் நிலவும் பாகுபாடு பற்றியும் பேசுவது தனது கடமை என்ற முறையிலேயே பேசியுள்ளார்.”
“அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25, ஒருவ ருக்கு பகுத்தறிவுவாதியாக இருக்கவும், நாத்தி கராக இருக்கவும் உரிமை அளிக்கிறது. அதே போல, சட்டப்பிரிவு 25 ஆனது, இறை நம்பிக்கை யாளர்கள் இறை நம்பிக்கையை பின்பற்றவும், பரப்பவும் எப்படி உரிமை அளித்திருக்கிறதோ; அதேபோல நாத்திகத்தை பின்பற்றவும், பரப்பவும் நாத்திகர்களுக்கு உரிமை அளித்திருக்கிறது.”
மேற்கண்டவாறு வாதிட்ட வழக்கறிஞர், ஒரு வர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு அரசி யலமைப்பு சட்டத்தின் 173ஆவது பிரிவு வரையறை செய்துள்ள தகுதிகள் அனைத்தும் உதயநிதிக்கு இருக்கிறது என்றும், தான் மற்றும் தனது கட்சி யின் கொள்கைகளை பேசியதாலேயே அவர் ‘தகுதி நீக்கத்திற்கு’ உரிய குற்றத்தை செய்து விட்டார் என்று பொருளல்ல எனவும், இது தொ டர்பான விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் பல்வேறு பிரிவு களில் மிக விரிவாக இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார். அந்த வாதம் இந்த வழக்கிற்கு மட்டுமல்ல; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர் தகுதி நீக்கம் தொடர்பான பல வழக்கு களுக்கு வெளிச்சம் தருகிறது.