சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் சாடல்
கடலூர், மார்ச்.13- கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம் புதுப்பேட்டையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்க பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு வி.வெங்க டேசன் தலைமை தாங்கினார். எம்.ராஜேந்திரன் வரவேற்றார். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஆர்.லோகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கிருஷ் ணன், வி.ரங்கநாதன், பி.கற்பனைச்செல்வம், பி.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம் கலந்து கொண்டு பேசுகையில், “மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை வழங்காமலும் நலத்திட்டங்களுக்கான தொகையை குறைத்தும் வருகிறது. ஆனாலும், பாஜகவின் ஏவலாளியாக அதிமுக அரசு செயல்படு கிறது” என்றார். சிஏஏ,என்பிஆர், என்ஆர்சியை எதிர்த்து நாடே போராட்டக் களத்தில் உள்ள நிலையிலும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக தயக்கம் காட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டி னார். கடலூர் மாவட்டம் வறட்சி, வெள்ளம் என இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. முதியோர் உதவித்தொகை வழங்கப்பட வில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் இல்லை. கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.