tamilnadu

img

அம்பத்தூர் சேது பாஸ்கரா 100 விழுக்காடு தேர்ச்சி

அம்பத்தூர், மே 6- அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 2024 ஆம் ஆண்டு 12ஆம்  வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சேது  பாஸ்கரா பள்ளியில் இருந்து பங்கேற்ற 746 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ்.வி. ஜெய்ஸ்ரீ 600க்கு 594 மதிப் பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை யும், எம்.மாதேஸ்வரன் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ஆம் இடத்தையும், ஆர்.ஜெனிஷா 589 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத் துள்ளனர்.

கணினி அறிவியல் பாடப் பிரிவில் 42 மாண வர்களும், வர்த்தகம் பாடப் பிரிவில் 22 மாணவர்களும், பொருளாதாரம் பாடப் பிரிவில் 15 மாணவர்களும், கணக்கியல் பாடப் பிரிவில் 8 மாணவர்களும், கணித பாடப் பிரிவில் 7 மாணவர்களும், பிரென்ச் பாடப் பிரிவில் 5 மாணவர்களும், இயற்பியல் பாட ப்பிரிவில் 3 மாணவர்களும், வேதியியல் பாடப் பிரிவில் 2 மாணவர்களும், கம்ப்யூட் டர் அப்ளிகேஷன் பாடப் பிரிவில் 21 மாணவர் என மொத்தம் 105 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பள்ளியின் தாளாளர் சேதுகுமணன், முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார் ஆகி யோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர் களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுதல் களையும் தெரிவித்தனர்.