முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணிச் சின்னம் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 24- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, 18-ஆவது மக்களவைத் தேர்தலிலும் ‘ஏணி’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள் ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு இராம நாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்.பி. நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலை யில், ஏற்கெனவே போட்டியிட்ட ஏணி சின்னத்தையே தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணை யத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டி ருந்தது. அதனைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மே 6-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை, மார்ச் 24- மார்ச் 1-ஆம் தொடங்கிய 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு அரசு பொதுத் தேர்வு முடிவடைந்தது. விடைத்தாள் திருத் தும் பணிகள் மாநிலம் முழு வதும் உள்ள 75 மையங்களில் நடை பெற உள்ளது. பொதுத்தேர்வில் சுமார் 77 ஆயிரத்து 865 மாணவர்கள் பங்கேற்க வில்லை என தகவல் வெளியானது. ஆனால், சுமார் 50 ஆயிரத்துக்கும் அதி கமான மாணவர்களே தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலை யில், மே 6-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி யுள்ளன.
தமிழகத்தில் உச்சத்தை தொட்ட மின் பயன்பாடு!
சென்னை, மார்ச் 23 - கோடைக்காலத் தில் மின்சாரப் பயன் பாடு அதிகரிப்பது வழக்கம். அந்த வகை யில், வெள்ளியன்று (மார்ச் 22) இதுவரை இல்லாத வகையில், ஒரேநாளில் 19,409 மெகாவாட் மின்சா ரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் அதிகபட்ச மாக ஏப்ரல் 20 அன்று 19,387 மெகா வாட் மின்சாரம் விநியோகம் செய்யப் பட்டிருந்ததே மாநிலத்தில் இதுவரையி லான அதிகபட்ச மின்பயன்பாடாக இருந் தது குறிப்பிடத்தக்கது.
பாலியல் பேர்வழி பாஜக வேட்பாளரா?
திருவள்ளூர் வாக்காளர்கள் கொதிப்பு
தமிழ்நாட்டில் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களின் பட்டியலை வியாழக்கிழமை யன்று அக்கட்சி வெளியிட்டது.
அதில் திருவள்ளூர் (தனி) தொகு தியில் பொன். பால கணபதி வேட்பா ளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவர், முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பா விடம் பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். அதுகுறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி புகார் ஒன்றையும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், பாலியல் சர்ச்சையில் சிக்கியவருக்கு மக்கள வைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்து உள்ளது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. கண்ட னத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. பாலியல் சீண்டல் சர்ச்சையில் சிக் கிய பாஜக வேட்பாளர் மாற்றப்பட வேண்டும் என பெண்கள் அமைப் புக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள் ளன.