tamilnadu

img

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பா.ம.க கூட்டணி.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அதிமுக – பாமக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி ஒ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், 

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியில் தங்கள் கூட்டணி நிலைபாடு மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்த பாமக, வரும் சட்டமன்ற தேர்தலிலும் தங்கள் கூட்டணியை தொடரும் என அறிவித்தது.

இன்று மாலை சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக – பாமக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிச்சாமி மற்றும் பாமக சார்பில் இளைஞரணி செயலாளார் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக 20 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்ற தேர்தல் அதிமுகயுடன் கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், எந்த எந்த இடங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் ஓ. பன்னீர் செல்வம் என தெரிவித்தார்.

;