சென்னை, டிச.30 - தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மேற்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக கூடும் என்றும் ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருக்கிறது.
எனவே, மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 7,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட் ட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.91 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப் பப்பட்டுள்ளன.
தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதையும், வெள்ள நீர் செல்வதை வேடிக்கை பார்ப்பதும், நீர் நிலைகளில் நின்று செல்பி எடுப்பதையும் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பெற்றுள் ளது. தொடர்ந்து தமிழ்நாடு முதல மைச்சரின் அறிவுரையின்படி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநில அவசர கால செயல் பாட்டு மையம் மூலம் 24 மணி நேர மும் நிலைமை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.