tamilnadu

img

மக்களவை தேர்தல் 2024: அதிமுக இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அதிமுக-வின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழ்நட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1.    ஸ்ரீபெரும்புதுார் – ஜி.பிரேம்குமார்
2.    வேலுார் – எஸ்.பசுபதி
3.    தருமபுரி – ஆர்.அசோகன்
4.    திருவண்ணாமலை – எம்.கலியபெருமாள்
5.    கள்ளக்குறிச்சி - இரா.குமரகுரு
6.    திருப்பூர் – பி.அருணாச்சலம்
7.    நீலகிரி – டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்
8.    கோவை – சிங்கை.ஜி.ராமச்சந்திரன்
9.    பொள்ளாச்சி – ஏ.கார்த்திகேயன் அப்புசாமி 
10.    திருச்சி - பி.கருப்பையா
11.    பெரம்பலுார் - என்.டி.சந்திரமோகன்
12.    மயிலாடுதுறை – பி.பாபு
13.    சிவகங்கை – ஏ.சேவியர் தாமஸ்
14.    துாத்துக்குடி – ஆர்.சிவசாமி வேலுமணி
15.    நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
16.    கன்னியாகுமரி – பசுலியான் நாசரேத்
17.    புதுச்சேரி - ஜி.தமிழ்வேந்தன்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி - ராணி 
மேலும், அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.