tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்
சென்னை, மார்ச் 30- மறைந்த நடி கர் முரளியின் உற வினர், டேனியல் பாலாஜி (48). ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். வேட்டையாடு விளை யாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல வெற்றிப் படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு திடீரென நெஞ்சு வலி  ஏற்பட்டதை தொடர்ந்து, டேனியல்  பாலாஜியை, சென்னை கொட்டிவாக்கத்  தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பல னின்றி அவர் உயிரிழந்தார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள  அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். டேனி யல் பாலாஜியின் மறைவு திரையுலகி னரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் பலரும் டேனியல் பாலாஜி உட லுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டேரியில் உள்ள  மின் மயானத்தில் டேனியலின் உடல் தக னம் செய்யப்பட்டது. முன்னதாக டேனி யல் பாலாஜியின் கண்களை அவரது உறவினர்கள் தானம் செய்தனர்.

பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம்
சென்னை, மார்ச் 30- ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு  தேர்வு தேதியை மாற்றி அமைக்க பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்  தன. அதன் அடிப்படையில் தேர்வு அட்ட வணையில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம்  வகுப்பு வரையில் படிக்கும் மாணவர் களுக்கு ஏப்ரல் 10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22 ஆம்  தேதிக்கும், ஏப்ரல் 12 அன்று நடக்க  இருந்த சமூக அறிவியல் தேர்வு 23 ஆம்  தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட  கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும்” என்று கூறப்பட் டுள்ளது.