சென்னை, டிச. 22- பெரு வெள்ளத்தின் போது ஆயில் கசிவுக்கு காரணமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) மற்றும் இதர ஆயில் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதி க்கப்பட்ட அனைத்து குடும்பங்க ளுக்கும், சேதமான பொருட்க ளுக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சிபிசிஎல் நிறுவனம் முன்பு வெளியன்று (டிச. 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிசம்பர் 3, 4 தேதிகளில் பெய்த அதிக கன மழையின் காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித் தது. குறிப்பாக வட சென்னைக் குட்பட்ட திருவொற்றியூர், எண்ணுர், ஆர்.கே.நகர், மணலி, சேக்காடு ஆகிய பகுதிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டது. மேலும், 5ஆம் தேதி வாக்கில் சிபிசிஎல் உள்ளிட்ட சில ஆயில் நிறுவனங்க ளில் இருந்து ஆயில் கழிவுகள் மழை நீருடன் கலந்து பக்கிங்காம் கால் வாய் வழியாக குடியிருப்புக ளுக்குள், கடலில் கலந்தது. இதனால் மக்கள் வீடுகளில் குடி யிருக்க முடியாமல் அவதிப் பட்டனர். படகு, மீன்பிடி வலை களிலும், கடலிலும் ஆயில் படிந்த தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். நச்சுத்தன்மை நிறைந்த கலவையால் மக்கள் பாதிக்கப்பட்டதுடன், நிலத்தடி நீர், விவசாய நிலங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் கால்நடைகள், இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், வீட்டில் இருந்த பிரிட்ஜ் மற்றும் உடமைகள் முற்றிலுமாக சேதார மடைந்துள்ளன. இந்நிலையில் சிபிசிஎல் நிறுவனம் 8 கோடி ரூபாய் மட்டுமே நிவரணம் அறிவித்துள் ளது.தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் சிபிசிஎல் நிறுவனம் வெறும் 2,301 வீடுகள், 271 படகுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. ஆனால் வலைகள், குடியிருப்பு, சிறு குறு பட்டரைகள், உடமைகள் சேதம் குறித்து அந்த நிறுவனம் உரிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. சென்னை மாநகராட்சி 6,800 வீடுகள் பாதிக்கப்பட்டதாக தெரி வித்துள்ளது.
ஆனால் உண்மை யில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஆயிரக்க ணக்கான படகுகள் பாதிக்கப்பட் டுள்ளன. 9க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் படிந்த ஆயில் கரையை அகற்ற முடியவில்லை. சிபிசிஎல் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல, லாபத்தில் இயங்கும் நிறுவனம். கடந்த நிதி யாண்டில் அந்த நிறுவனத்தில் நிகர லாபம் 1,045 கோடியாகும். எனவே வருவாய் துறை மூலம் எத்தனை குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன, எவ்வளவு பொருட்கள், உடமைகள் சேதமடைந்தன என்பதை துல்லி யமாக கணக்கிட்டு, சிபிசிஎல் நிறு வனத்திடம் இருந்து முழுமை யான இழப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உயர்ரக ரசாயனக் கல வையை பயன்படுத்தி குடியிருப்பு களில் படிந்துள்ள எண்ணை கறைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலை வர்கள் வலியுறுத்தினர். மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.பாக்கி யலட்சுமி ஆகியோர் பேசினர். முன்னதாக மணலி பகுதிச் செயலாளர் பாபு வரவேற்றார். திரு வொற்றியூர் பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் நன்றி கூறினார். இதில் மாநிக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கார்த்தீஷ்குமார், எல்.பி.சரவணத்தமிழன், ஆர்.லோக நாதன், கவுன்சிலர் விமலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.