tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

  வேட்பாளர்களின் இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம்

ென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் புதனன்று (ஏப்.17) சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரை பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, திமுக சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் மதியழகன், சிபிஎம் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு புதனன்று (ஏப்.17) தாம்பரம் பகுதி, அகரம்தென் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, பரங்கிமலை ஒன்றிய செயலாளர் ஜி.கே.ரவி (எ) விவேகானந்தன், சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, பகுதிக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ஜெயவேலு, செந்தில் முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் புதனன்று (ஏப்.17) திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரித்தார். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு, ஆயிரம் விளக்கு பகுதி, தர்மாபுரம் குடியிருப்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

வட சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே. நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று புதனன்று (ஏப். 17) வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள், பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணலியில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் டி.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;