tamilnadu

ஆட்டிசம் குறித்த சிறப்பு பயிலரங்கம்

சென்னை, ஏப். 3-

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் குறித்தசிறப்பு பயிலரங்கம் சென்னையில் கடந்த ஞாயிறன்று (மார்ச் 31 ) நடைபெற்றது. ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநலபாதுகாப்பு மருத்துவத்தில் முன்னணியில் உள்ள புத்தி கிளினிக் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிலரங்கில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுமருத்துவம் மற்றும் மாற்று சிகிச்சை மூலமாக குணப்படுத்துவது குறித்து இந்த துறையில் பணியாற்றிவரும் மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினர். நரம்பு தொடர்பான பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் :முலமும் முன்னேறியுள் ள நவீன மருத்துவத்தின் உதவியுடன் இதில் நல்ல முன்னேற்றத்தை காணமுடியும் என்று அவர்கள் கூறினார். ஆட்டிசம் குறித்து புத்தி கிளினிக் அனுபவம் குறித்து எம்.ஜெ. மனிமாறன், கே.முத்துக்கருப்பன் ஆகியோர்விளக்கினர். “வித்தியாசமா சிந்திப்போம்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் டாக்டர் ராதிகா சவுந்தரராஜன், நித்யாமோகன், உஷா ராமகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, டாக்டர் ரெமா ரகு ஆகியோர் பேசினர். இறுதியில் டாக்டர் எனப்பாடம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். 

;