tamilnadu

img

தெற்கு அந்தமானில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  

அந்தமானில் சனிக்கிழமை (நவ.13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, “வியாழனன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதியில் கரையை கடந்த பின் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட உள் தமிழக பகுதியில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதியில் சனிக்கிழமை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று 15 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியை நெருங்கும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.  அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறினார்.

;