tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நாட்டின் முதன்மையான நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 20 சதவீதம் லாபத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12, 826 கோடியாக இருந்தது; நடப்பு ஆண்டில் நிகரலாபம் ரூ.10,216 கோடியாக வீழ்ந்துள்ளது. இதேபோல மிகப்பெரிய முதன்மை நிறுவனமான எல்ஐசியின் லாபத்திலும் 50 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இதுபோன்ற முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் மோடி அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது. மக்களின் சொத்துக்களான இந்நிறுவனங்களின் லாபங்களும் வளங்களும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கூட்டுக் களவாணி களது நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப் படுகின்றன.