tamilnadu

img

3 மாதங்களில் மின்சாரம் பாய்ந்து 97 மின் ஊழியர்கள் பலி – ஆய்வில் தகவல்!  

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மின்சாரம் பாய்ந்து 97 மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.  

ஜனவரி முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட 97 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக அரசு புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.    

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக தலைமை அலுவலர் கூறுகையில், ''ஊழியர்களுக்கு மாதமொரு முறை பாதுகாப்பு தொடர்பான வகுப்புகள் எடுக்க தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மேலும், களப்பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு, காலணிகள், தலைக்கவசம், பாதுகாப்பு உடைகள், ரப்பர் கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.   மாநிலம் முழுவதுமுள்ள பழுதடைந்த துளைகள், மின் தடங்கள் மற்றும் பழைய மின் சாதனங்களை மாற்றியமைக்க அனைத்து அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.  

கடந்த சில மாதங்களில் மட்டும் 15 கேங்மேன்கள் உயிரிழந்தனர். 85 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் இதில் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரினார்.

;