tamilnadu

கடலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 9 துணை ஆட்சியர்கள்

கடலூர், ஜூன் 15- கடலூர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 9 துணை ஆட்சி யர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனாவி னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துச் சென்றுள்ளது. சுமார் 65 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  நிலையில் சென்னை மற்றும் வெளிமாநிலங் களிலிருந்து வருவோர் மூலமாக தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சியின் 45 வார்டுகளை 9 தொகுப்பாக பிரித்து, ஒரு  தொகுப்பிற்கு ஒரு துணை ஆட்சியர்கள்  பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள 5 வார்டுகளில் உள்ள  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல், அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி  தெளிப்பது, அனைத்து வீடுகளுக்கும்  கபசுர  குடிநீர் வழங்கும் பணியை மேற்கொள்வார் கள்.

மேலும், 50 வீடுகளுக்கு ஒரு செவிலியர்  வீதம் நியமிக்கப்பட்டு அனைத்து நபர்க ளுக்கும் பரிசோதனை நடத்தப்படும். வெளியூர்களிலிருந்து கிராமங்களுக்கு வருவபர்களின் தகவல்களை வழங்கும் வகையில் கிராம அளவிலான பாதுகாப்பு குழு  செயல்பட்டு வருகிறது. ஆனால், நகரப் பகுதி யில் வெளியூர்களிலிருந்து வருபவர்களின் விபரங்களை சேகரிப்பது கடினமாக உள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல்  சுற்றுவது, தனிமனித இடைவெளியை பின்பற்றாதது ஆகியவையும் நகரப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. முகக்கசவம் அணியாமல் சுற்றுவபர்களுக்கு ரூ.100 அபரா தம் விதிக்கப்பட்டதை தீவிரமாக அமல்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை கடைப் பிடித்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடி யும். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்புப் பும் அவசியம் என்றார்.