tamilnadu

img

தமிகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை, ஈரோடு,  சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கெரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மதுரையில் ஏற்கனவே கொரேனா பாதிப்பால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த இருவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.