tamilnadu

img

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் பலி

திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. 
திருநெல்வேலியிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்  பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த வாகனம் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அமந்த  இரண்டு குழந்தைகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.