சென்னை ஏப்.6- தமிழ்நாட்டில் 571 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றார். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
நோயின் தோற்று தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி விட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சென்னை மாநகரத்தில் மக்கள் கூட்டம் இறுக்கத்தை குறைப்பதற்காக நடமாடும் காய்கறி கடைகளை பிறப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இம்மாதம் 9ஆம் தேதி புதிதாக 'ராபிட்' டெஸ்ட் கருவி தமிழகத்திற்கு வர அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்றும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் ஏற்கனவே 17 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் மேலும் 21 பரிசோதனை மையங்கள் புதிதாக திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். மாநில பேரிடர் நிதியிலிருந்து வேண்டும் மத்திய அரசு மீண்டும் 500 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி இருப்பதாகவும் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்தார்.