23-ஆம் புலிகேசி இல்லையாம்!
இல்லையாம்! “போர் வருகிறதோ இல்லையோ. ஆயுதங்களை கூர் தீட்டுவதும், படை வீரர்கள் பயிற்சி எடுப்பதும் எப்போதும் நடைபெறும். அதுபோல் மக்களவைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதை சந்திக்க தயார். ஆறு மாதங்க ளுக்கு முன்பிருந்தே நாங்கள் தயாராக உள்ளோம். சில கட்சிகளைப் போல் தேர் தல் அறிவித்தவுடன் பூத் கமிட்டி அமைப் பது குறித்து பேசுவதில்லை. எடப்பாடி பழனிசாமி ஒன்றும் 23-ஆம் புலிகேசி அல்ல. போருக்கு அவர் எப்போதும் தயா ராகவே உள்ளார்” என்றார் அதிமுக முன் னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
எடப்பாடி பழனிசாமி நெற்றியில் இருந்த திருநீறை அழித்துவிட்டு எஸ்டி பிஐ மாநாட்டில் பங்கேற்றதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர் சித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில ளித்த செல்லூர் கே.ராஜூ, “ அவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம். நாவடக்கம் தேவை. இப்படி பேசுவதை எப்படி பாஜக பார்த்துக்கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை” என்றார்.
2 ரவுண்டு முடிந்ததாம்!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (ஏஐஎஸ்எம்கே) கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. இது குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய கட்சியின் தலை வர் சரத்குமார், “அதிமுக தலைவர்களு டன் ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளோம். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் திற்கு நடைபெறும் தேர்தலில் தனிக் கவ னம் செலுத்தவுள்ளோம் என்றார்.