tamilnadu

img

ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டு  சிறைத்தண்டனை... தமிழக அரசு எச்சரிக்கை 

சென்னை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகமெங்கும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மதுரையில் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"இந்திய குற்றவியல் சட்டம் 270-வது பிரிவு படி, ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வீரியமிக்க வைரஸ் பரவலுக்கு, தெரிந்தே ஒருவர் காரணமாக இருப்பது உறுதி ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். குறிப்பாக அரசின் உத்தரவை மீறி ஆபத்தான வைரஸ் தொற்று பரவுவதற்கான செயலில் ஈடுபட்டாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ, இந்திய குற்றவியல் சட்டம் 269-வது பிரிவின் கீழ் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தனிமை முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டவர்கள், அரசின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருந்தால், இந்திய குற்றவியல் சட்டம் 271-வது பிரிவு படி 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது.  

;