tamilnadu

சென்னையில் 2 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு என எச்சரிக்கை

கொரோனா பரிசோதனை செய்ய மறுப்பு

சென்னை, மே 27 - கொரோனா தொற்று இருக்கலாம் என்று  சந்தேகத்துடன் செல்பவர்களை அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்க மறுப்ப தாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் 12 ஆயிரத்து 203 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள னர். 5800 பேர் குணமடைந்துள்ளனர். 95 பேர்  உயிரிந்துள்ளனர். 6 ஆயிரத்து 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.க கிருமி தொற்று உள்ளவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு, வீடு களுக்கு அனுப்பும் போது பரிசோதிக்க தேவையில்லை என்று விதியை மாற்றி குணம்  அடையாதவர்களையும் மருந்து கொடுத்து அனுப்பி வருகின்றனர். அறிகுறி இன்றி சிகிச்சை பெற்ற வருகிறவர்களையும் சில நாட்களில் மீண்டும் பரிசோதிக்காமல், குண மடைந்ததாக வீட்டிற்கு அனுப்பிவிடு கிறார்கள் என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த குடும்பம் முழு வதையும் பரிசோதிக்க மறுக்கின்றனர்.

தொற்றுக்கான அறிகுறி இருக்கலாம் என்று  அச்சத்தோடு செல்கிறவர்களுக்கு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கின்ற னர். மாறாக, சில மாத்திரைகளை கொடுத்து  அனுப்பி விடுகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 86  விழுக்காட்டினருக்கு அறிகுறி இன்றி கொரோனா தொற்று வந்துள்ளது என்று  குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்  கர் கூறியிருக்கும் நிலையில், மருத்துவ மனைகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. பூரண குணமடையாமல் சில நாட்களி லேயே வீட்டிற்கு அனுப்புகின்றனர். அத்தகை யோரின் குடும்பத்தினர் மருத்துவர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிகழ்வுகள் தினசரி நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள், சமூக  ஆர்வலர்கள் சோதனையை அதிகப்படுத்த வேண்டும், சமூக பரவலை கண்டறிய ரேண்டம் பரிசோதனை செய்ய வேண்டும்  என்று கோரி வரும் நிலையில் மருத்துவ மனைகளின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன. இந்நிலையில், பரிசோதனைகளை அதிகப்படுத்தி, வைரஸ் பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பது ஒன்றே கொரோனாவை கட்டுப்படுத்த தீர்வாகும். இல்லையெனில் ஜூன் மாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேர் வைரஸ்  பாதிப்பிற்கு ஆளாகிவிடுவர். 1,400க்கும் மேற்பட்டோர் பலியாகக்கூடும்', என்று நிபுணர்  குழு எச்சரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.