tamilnadu

img

12 ஆம் வகுப்பு மாணவர்கள் வங்கிக் கணக்கில் உதவித்தொகை

சென்னை:
உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்க ளின் வங்கிக்கணக்கு  விவரங்களை உடனடியாக இஎம்ஐஎஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வக்குப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், படிப்புக் காலம் முடிவுற்று உயர்கல்வி செல்லும் போது இடைநிற்றலைத் தவிர்க்க தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்ததிட்டம் மூலம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1,500, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.2,000 என்று ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்து, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாக  மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளமான இஎம்ஐஎஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுவரைக்கும் 1,69,108 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மட்டுமே  பதிவேற்றப் பட்டுள்ளதாகவும், எஞ்சிய 3,65,974 மாணவர்களின் விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி வங்கிக்கணக்கு விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 5.35 லட்சம் பேருக்கு தலா ரூ.2,000 ஊக்கத்தொகையும் 12 ஆம் வகுப்பு முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;