சென்னை, மே 10 - 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் சென்னை பள்ளி மாணவர்கள் 79.11 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள னர்.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்படுகிறது. இந்தப் பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
2023-2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 7,311 மாணவ, மாண வியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 5,784 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 79.11 ஆகும்.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்
கணிதப் பாடத்தில் 24 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் 5 மாண வர்கள் என மொத்தம் 33 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ள னர்.
மொத்த மதிப்பெண்கள்
மதிப்பெண்கள் அடிப்படையில் நுங்கம்பாக்கம் - சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 500 மதிப்பெண் களுக்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தரமணி - சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் சோழபுரம் - சென்னை உயர்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 500 மதிப்பெண்களுக்கு 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், ரங்கராஜபுரம் - சென்னை உயர்நிலைப் பள்ளி மற்றும் புத்தா தெரு - சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 500 மதிப்பெண்களுக்கு 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றா மிடத்தையும், தரமணி - சென்னை மேல்நிலைப் பள்ளி 500 மதிப்பெண் களுக்கு 487 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், புத்தா தெரு - சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மதிப்பெண்கள் அடிப்படையில்…
192 மாணவ, மாணவியர்கள் 451 மதிப்பெண்களுக்கு மேலும், 601 மாணவ, மாணவியர்கள் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 917 மாணவ, மாணவியர்கள் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ள னர்.
தேர்ச்சி விகிதம்
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படை யில் கனால் பேங்க் மற்றும் ரங்கராஜ புரம் சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடத் தையும், மேற்கு மாம்பலம் - சென்னை உயர்நிலைப்பள்ளி 98.44 சதவீதத் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், நுங்கம்பாக்கம் - சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கண்ணம் மாபேட்டை - சென்னை உயர்நிலைப் பள்ளி 98 சதவீதத் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், ஸ்ட்ராஹன்ஸ் சாலை - சென்னை உயர்நிலைப்பள்ளி 97.44 சதவீதத் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், பாடிக்குப்பம் சாலை மற்றும் காமராஜ் அவென்யூ சென்னை உயர்நிலைப் பள்ளிகள் 97.06 சதவீதத் தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.