சென்னை, ஆக.27- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பணிமனை யில் சூரிய சக்தியை பயன்படுத்தி 5.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 4.7.2019 அன்று 1.2 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இத்துடன் சேர்ந்து மொத்த உற்பத்தி திறன் 5.3 மெகாவாட் ஆக உயர்ந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சி.எம்.பி.டி. மெட்ரோரயில் நிலையத்தின் கூரையின் மேல் 100 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 8 மெகா வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆண்டு தோறும் 116.80 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும். இதனால் ஆண்டிற்கு ரூ.2.54 கோடி சேமிப்பு ஏற்படும். மேலும் இதனால் வெளி வரும் கரியமில வாயு வெளி யிடும் அளவு ஆண்டிற்கு 11.587 டன் குறையும் என நிர்வாக அதிகாரிகள் கூறு கின்றனர்.
பயண அட்டை மூலம் வாகன கட்டணம் செலுத்தலாம்
மெட்ரோ ரயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்கு வதற்காக பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாட்டை சோதனை அடிப்படையில் ரயில் நிலை யங்களில் அறிமுகப்படு த்தப்பட்டு ள்ளது. இந்த புதிய முறை அனைத்து ரயில் நிலையங்களிலும் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய முறைப்படி சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கான கட்ட ணத்தை, பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும். மெட்ரோ ரயில் பயண அட்டை இல்லாத பயணிகள், பொது மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையம் மூல மாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவே, மெட்ரோ ரயில் பயண அட்டையை வாங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பார்க்கிங் கட்ட ணத்தை செலுத்த முடியும்.