tamilnadu

img

விருத்தாச்சலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பொன்னேரியில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்

விருத்தாச்சலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் பொன்னேரியில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் போராட்டம் வட்டத் தலைவர் ராஜா  தலைமையில் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக 100 நாள் வேலை வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன், வட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்ட துணைத் தலைவர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்ட களத்திலேயே வேலை வழங்கப்பட்டது அந்தப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.