tamilnadu

img

”இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்பது தவறு” - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்பது தவறு என்றும், எனவே பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் 180க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 11,418 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,528 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கொரோனா வைரஸ் முதியவர்களை தான் பாதிக்கும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை பாதிக்காது என்று ஒருசில கருத்துகள் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலையில், இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்பது தவறு என்றும், எனவே பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

;