tamilnadu

img

சிரியா திடீர் வான்வெளி தாக்குதல்...  துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் பலி

டமாஸ்கஸ்
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் 2011-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 9 ஆண்டுகள் உள்நாட்டுப்போர் நிகழ்ந்து வருகிறது.

இந்த போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் போராளிகள் குழுக்கள் மீதும் சிரியா ராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. தொடர் ஆதரவு அளித்து வரும் துருக்கி அரசு இட்லிப் மாகாணத்தை (சில பகுதிகள்) கைப்பற்றும் நோக்கில் அவ்வப்போது சிரிய எல்லைக்குள் புகுந்து தங்கள் படைகளைக் குவிப்பது வழக்கம். 

பதற்றமிக்க இந்த இட்லிப் மாகாணத்தைக் கைப்பற்றும் துருக்கியின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் சிரியா, ரஷ்யாவுடன் இணைந்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள  பாரா மற்றும் பிலியன் ஆகிய நகரங்களில் வெள்ளியன்று வான்வெளி தாக்குதல்கள் நடத்தியது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் சிரிய அரசு எதிர்ப்பு போராளிகள் யாரும் பலியாகவில்லை. துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் பலியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

;