tamilnadu

img

சுரிநாம் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை 

பராமரிபோ
தென் அமெரிக்க கண்டத்தின் பிரேசில் வடமுனை பகுதிக்கு அருகே உள்ள குட்டி நாடு சுரிநாம். நெதர்லாந்து அரசின் கீழ் இருந்த இந்த அந்நாடு 1975-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 1980 வரை ராணுவ ஆட்சியில் இருந்த நிலையில், அதே ஆண்டு ராணுவ ஆட்சியைக் கவிழ்த்து தேசி பவுட்டர்ஸ் (74) என்பவர் ஆட்சியைப் பிடித்தார். இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தேசி பவுட்டர்ஸ் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் 15 கொலை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்குகளின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் தேசி பவுட்டர்ஸுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவுட்டர்ஸ் தற்போது நாட்டில் இல்லை. எனினும் சுரிநாம் வந்த பிறகு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  
 

;