tamilnadu

img

பணி நியமனம் பெறுவோருக்கு மாநில மொழி அறிவு தேவை

சென்னை:
எல்.ஐ.சி பணி நியமனம் பெறுவோருக்கு அந்தந்த மாநில மொழி அறிவும் தேவை என்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுமையும் 8 ஆயிரம் உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான பணி நியமன அறிவிக்கை செப்டம்பர்16 அன்று வெளியிடப்பட்டது. அதில் இந்தி மாநிலங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்திக்கான ஒரு கூடுதல் தேர்ச்சி இறுதி கட்ட தேர்வில் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தி அல்லாத மாநிலங்களுக்கான தேர்வு முறையில் மாநில மொழி அறிவுக்கான எந்தவொரு தேர்வும் அறிவிக்கப்படவில்லை. இது பாரபட்சமான தேர்வு முறைமை என்றும், இந்தி தெரியாதவர்கள் இந்தி பகுதிகளில் நியமனம் பெற இயலாது; ஆனால் மற்ற மாநில மொழி அறியாதவர்கள் அங்கெல்லாம் பணி நியமனம் பெற இயலுமென்ற நிலையை உருவாக்கியது. மேலும் இது கிராமப்புற, சாமானிய மக்களுக்கான இன்சூரன்ஸ் சேவையை பாதிக்கும் என்ற நிலைமையும் ஏற்பட்டது. 1993-ல் மாநில மொழி தேர்ச்சியும் தேர்வு முறைமையில் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய தேர்வு முறைமை அத்தகைய அம்சத்தை நீக்கியிருந்தது. தமிழகம், கேரளத்தில் 400 உதவியாளர்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த கோரிக்கை தமிழகத்திலும் வலுவாக எழுந்தது. 

சங்கத்தின் தலையீடு
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மும்பை மைய அலுவலகத்திடம் இப் பிரச்சனை குறித்து எழுப்பியது. எல்.ஐ.சி சேர்மனுக்கு கடிதத்தையும் அனுப்பியது.இந்நிலையில் மாநில மொழி அறிவும் சோதிக்கப்படுவதற்கான அம்சம் தேர்வு முறைமையில் இருக்குமென்ற அறிவிப்பு எல்.ஐ.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் வடிவம் எவ்வாறு அமையும் என்பது முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது.

;