தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலியின் இல்லபெல் நகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தென்மேற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டிடங்கள் குலுங்கின இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இதேபோல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டிலும் நேற்று இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நியாபு நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 131 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகி இருந்தது.