tamilnadu

img

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 14 மில்லியன் டாலர் வழங்கிய ஜாக் மா!

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க, சீன அரசுக்கு நிதியாக 14 மில்லியன் டாலர்களை அலிபாபா நிறுவனர் ஜாக் மா வழங்கியுள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரத்தில் இருந்து இந்த கரோனா வைரஸ் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது. பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 7,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் வாயிலாக சீன அரசுக்கு 14 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளார். இதில் 5.8 மில்லியன் டாலர் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சீன அரசுக்கு சொந்தமான இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீத தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்த வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 

;