உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதல் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 199 நாடுகளில் பரவியுள்ளது. இதில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 1044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.