சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணின்னை 361 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீனா அரசு, 1500 படுகைகளுடனும், அனைத்து மருத்துவ வசதிகளுடனும், இரண்டாவதாக ஒரு புதிய மருத்துவமனையை கட்டி வருகிறது.
சீனாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் பல, சீனாவுக்கான போக்குவரத்து சேவையை நிறுத்தி உள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பானது சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.