tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

பிஏபி  திட்டத்தில் நல்லாறு அணை கட்டியிருந்தால்  பல ஆயிரம் கன அடி நீர் வீணாவதை தடுத்திருக்கலாம் விவசாயிகள் வேதனை                                                                                                                                                                                                           திருப்பூர், ஆக. 10 – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் நல்லாறு அணை கட்டப் பட்டிருந்தால் தற்போது பல ஆயிரம் கனஅடி மழைநீர் வீணாகிச் செல்வதை தடுத்திருப்பதுடன், பாசனத்திற்கும், குடிநீருக்கும் கூடுதல் தண்ணீரைத் தேக்கியிருக்கலாம் என்று விவசாயி கள் வேதனையுடன் கறுகின்றனர். பிஏபி பாசனத் திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 4 லட்சம் ஏக்கர் விவசாயப் பரப்பு பாசன வசதி பெறுகிறது. அத்து டன் பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திருமூர்த்தி அணை நீர் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலமான மழை பெய்து வருகிறது. ஆனால் இங்கு கிடைக்கும் மழைநீரினை முழுமையாக அணைக ளில் தேக்கி சேகரிக்க முடியாமல் பல லட்சம் கன அடி நீர் விரயமாகி ஆற்று வழியாக கடலைப் போய்ச் சேருகிறது. மழையினால் கிடைக்கும் நீர் வீணா வதைத் தடுக்கத்தான் நல்லாறு அணை யைக் கட்ட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பிஏபி திட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். குறிப்பாக தமி ழகத்தில் உள்ள அனைத்து அணைக ளும் நிரம்பி வரும் நிலையில் திரு மூர்த்தி அணையின் நீர்மட்டம் இன் னும் 13/60 அடி என்ற மிக மோசமான நிலையில்தான் உள்ளது. மக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற் கும் தண்ணீர் இல்லாமல் அல்லல்பட்டு கொண்டு இருக்கும் நிலை நீடிக்கிறது. பிஏபி திட்டத்தில் நல்லாறு அணை கட்டாமல் பல ஆயிரம் கன அடி தண் ணீரை வீணடிப்பது, கோவை, திருப் பூர் மாவட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் செய்யும் துரோகம் என விவ சாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  தேசத் தலைவர்கள் காமராஜரும், கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாபெரும் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும் முறையே தமிழக, கேரள முதல்வராக இருந்தபோது உருவாக்கிய பிஏபி திட்டத்தை உயிர்ப்புள்ளதாக பயன ளிக்கும் வகையில் மாற்றுவதற்கு விவசாயிகள் நல்லாறு திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த அணிதிரள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்தடுத்து வீதிகளில் தொடர் திருட்டு : அச்சத்தின் பிடியில் மக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                     அவிநாசி, ஆக. 10- அடுத்தடுத்த வீதிகளில் தொடர்ந்து நடைபெறும் திருட்டால் அவிநாசி மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ள னர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஐஸ்காரர் தெருவில் வசித்து வரும் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திருவிழாவிற்காகச் சென்று திருவிழா முடிந்து வெள்ளி யன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியன் காவல்துறையில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த அவினாசி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காமராஜ் நகர் பகுதியில் சாலையப்பாளை யம், ஜெய்சக்தி அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசு மருத்து வர் ரங்கசாமி, உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத் துடன் வெளியூர் சென்றுவிட்டு ஜூலை 15ஆம் தேதி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது. 20 நாள் இடைவெளியில் நடைபெற்றுள்ள இரு திருட்டுச் சம்பவங்கள் அவிநாசி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.