tamilnadu

img

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன்

சிவகங்கை, மே 30- உயர்நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விட்டு  சிவகங்கை மாவட்டம் முத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மணல் கொள்ளை  நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்டச் செயலா ளர் வீரபாண்டி விடுத்துள்ள அறிக்கை:- உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி தாலுகா  முத்தூர், துகவூர், சமுத்திரம், மானாமதுரை தாலூகா கள்ளர் வலசை, பெரிய கோட்டை, தீயனூர், கால்பிரபு வைகை ஆறு, திருப்புவனம் தாலூகா ஒடாத்தூர், கிருதுமால்நதி பகுதி, பாப்பாகுடி, சங்கட்டி, கானூர் உள்ளிட்ட 25க்கு மேற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், இளையான்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி,  ராஜூ, பரிசுத்தம்,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தென்னரசு, மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் ஜேம்ஸ்ராஜா ஆகியோர் முத்தூர் மணல் குவாரியை பார்வையிட்டோம். பின்னர் முத்தூர் ஊராட்சித் தலைவர் பாண்டிச்செல்வி, கிராம மக்கள் குவாரியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். முத்தூர் கண்மாய் 1,200ஏக்கர் பாசன வசதி கொண்டது. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது. கண்மாயின் உட்பகுதியில் நீர்வரத்துப் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் 80அடி ஆழத்தில் மணல் அள்ளினர்..  

மக்கள் போராட்டத்தால் அது தடுக்கப் பட்டதாகக் கூறினர்  சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமால் கனிம வளத்துறை செயல்படுகிறது. ஆளும்கட்சியின் ஆதரவோடு மணல் கொள்ளை அரங்கேற்றப் படுகிறது. இங்கு சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை. மாவட்டம் முழுவதும்  மணல் கொள்ளை நடைபெறுகிறது. அமைச்சர் பாஸ்கரன் ஊருக்கு அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் மணல் அள்ளுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊருக்கு அருகே நூற்றுகணக்கில் மணல் அள்ளத் தேவை யான இயந்திரங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இவை  சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு பயன் படுத்தப்படுகிறது எனத் தெரியவருகிறது.

ஆளும் கட்சியினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதால் அதிகாரிகள் வேறுவழியின்றி வேடிக்கை பார்க்கிறார்கள். மாவட்டத்தை இரண்டு மண்டலமாகப் பிரித்து மணல் கொள்ளை நடக்கிறறது. மாவட்ட மக்களை, விவசாயிகளை காப்பதற்கு மணல் கொள் ளையை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும். இவ்வாறு வீரபாண்டியன் கூறியுள்ளார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கே.தண்டியப்பன் கூறும் போது, “திருப்புவனம்  பாப்பாகுடியில்  நாளொன்றுக்கு நூறு முதல் இரு நூறு லாரி வரை மணல் கொண்டு செல்லப்படு கிறது. கானூர்,சங்கட்டி ஆகிய பகுதிகளில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. மணல் குவாரி அமைப்பதற்கு இடது பிரதானக் கால்வாயை தடுத்து லாரி செல்ல பாதை அமைத்திருக்கிறார்கள். கள்ளர்வலசையில் மணல் அள்ள செய்களத்தூர் கண்மாயில் கரையை உடைத்து பாதை அமைத்திருக்கிறார்கள். உயர்நீதிமன்ற உத்திரவை மீறி செயல்படுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றார்.

;