tamilnadu

img

காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

.தஞ்சாவூர், பிப்.16- சென்னை வண்ணாரப் பேட்டை யில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது, காவல்துறை நடத்திய தடியடி யைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதி ராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர். சாதிக் பாட்சா, முகமது தமீம், அதிராம் பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, முகமது யூசுப், எம்.நசுருதீன் சாலிகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக ‘சிஏஏ வை திரும்பப்பெறு’, ‘என்ஆர்சி-ஐ புறக்கணி’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணி யாக புறப்பட்டுச் சென்று பேருந்து நிலையம் வந்தனர். ஆர்ப்பாட்டத் தில், பெண்கள் உட்பட 300 க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். நிறைவில் நசுருதீன் நன்றி கூறினார்
புதுக்கோட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்ட சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கண்டன உரையாற்றினார்.  சென்னை வண்ணாரப்பேட்டை யில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான இஸ்லாமிய பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்க ளை எழுப்பினார்கள்.