tamilnadu

சிவகங்கையில் குழந்தைகள் புத்தகத் திருவிழா தொடங்கியது

சிவகங்கை, ஜன.11- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கை யில் வியாழனன்று புத்தகக் திருவிழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. புத்தக்திருவிழாவின் தொடக்கமாக ஆர்.ஆர்.கே. நடுநிலைப்பள்ளி, நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளி மாணவர்கள்  சிவகங்கை அரண்மணை வாசலில் பங்கேற்ற பேணி நடைபெற் றது. பேரணியை மாவட்டக் கல்வி அலுவலர் கோ. அமுதா துவக்கி வைத்தார். புலவர் கா.காளிராசா தலைமை வகித்தார். புத்தகத் திருவிழா அரங்கை மாவட்ட ஆட்சி யர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்ததோடு பேரணியில் பங்கேற்ற 130 மாணவ-மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான புத்த கங்களை வாங்கிக் கொடுத் தார். குழந்தைகள் அரங்கை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் பா. சாஸ்தாசுந்தரமும், தொலை நோக்கி அரங்கை மாவட்டப் பொருளாளர் சூ.ஆரோக்கிய சாமியும், மண்பாண்ட பொ ருட்காட்சியை சிவகங்கை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ஆர்.சந்திர னும், பனைஒலை, கைவினை பொருள்விற்பனை அரங்கை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலா ளர் எஸ்.டி.பாலகிருஷ்ண னும், குழந்தைகள் ஓவியக் கண்காட்சியை தமிழ் நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் சி.ஆரோக்கிய சாமியும் தொடங்கி வைத்தனர்.  சிவகங்கை மாவட்டத் தின் படைப்பாளிகள் புத்தக அரங்கை தமுஎகச மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன் தொ டங்கி வைத்தார். முன்னதாக வரவேற்புக்குழு செயலாளர் பொ.சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். வியாழனன்று  ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 750- க்கு குழந்தைகள் புத்தகங் கள் விற்பனையானது.

;