tamilnadu

img

தவணை காலத்திற்கு அநியாய வட்டி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முற்றுகை

கோவை, மே 29 –  ஊரடங்கு காலத்திற்கென ரிசர்வ் வங்கி தவணைக் காலத்தை நீட்டித் துள்ள நிலையில், தவணை காலத்திற்கு  அநியாய வட்டியை வசூலிப்பதாக குற் றம் சாட்டி கோவை பஜாஜ் பை னான்ஸ் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பந்தயசாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில்  பஜாஜ் பைனான்ஸ் நிறு வனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தவணை செலுத்த ரிசர்வ்  வங்கி கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் இதனை மதிக்காத பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தவணை தொகையை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதுடன், தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு  அப ராதம் என்கிற பெயரில் பணப்பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த வாடிக்கை யாளர்கள் வெள்ளியன்று பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை முற்றுகை யிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.  குறைந்த அளவு தவணை தொகைக்கு காசோலையில் பணம் இல்லாததால் வங்கியில் தனியாக அபராதமும், பஜாஜ் பைனான்ஸ் நிறு வனத்தில் அபராமும் விதிக்கப்படு வதாகவும், இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதற்கு 1400 ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகவும்  வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி னர். சமீபத்தில்  பைனான்ஸ் தொகை  பெறாத பழைய வாடிக்கையாளர் களுக்கும் கூட அபராத தொகை  விதித்து இருப்பதால் அவர்களும் குழப்பத்தில் பழைய ஆவணங் களுடன் பஜாஜ் பைனான்ஸ் நிறு வனத்தில் குவிந்தனர்.  அலுவலகத்தின் வாசலிலும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பொது மக்களை அழைத்து சமரசம் பேசிய  காவல் துறையினர்  நிர்வாகத் தினரை அழைத்து கூட்டம் கூடாமல்   வாடிக்கையாளர்களுக்கு தெளிவு படுத்தி அனுப்பி வைக்குமாறு அறி வுறுத்தினர். அதேநேரம், ரிசர்வ் வங்கி யின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக் கையாளர்கள் வலியுறுத்தினர்.