tamilnadu

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மினி பஸ் இயக்கம்

சென்னை, ஜூலை 30- சென்னை மாநகரப் போக்குவரத்து நெருக்கடியை குறைப்ப தற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்டமாக 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து வருகிறது. தற்போது பயணிகளின் வசதிக்காக ஆலந்தூர், எல்.ஐ.சி., டி.எம்.எஸ்., வண்ணாரப்பேட்டை, மெட்ரோ ரயில் நிலையங்க ளில் இருந்து கூடுதலாக 11  மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் புதிய 5 வழித்தட பாதைகளில் செல்லும். எஸ்-84 பேருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டி.எல்.எப். வரை செல்லும். எல்.ஐ.சி. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எஸ்- 30 பேருந்து விவேகானந்தர் இல்லம் வரை சென்றுவரும். டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எஸ் -36  பேருந்து நுங்கம்பா க்கம் ரயில் நிலையம் வரை சென்று வரும். வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய த்தில் இருந்து எஸ்-72  பேருந்து ஐ.ஓ.சி. வரை செல்லும். எஸ்- 71 வண்ணா ரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை சென்றுவரும். ஒவ்வொரு 20 நிமிடங்க ளுக்கு ஒருமுறை மினி பஸ் மெட்ரோ ரயில் நிலையங்க ளில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.  மாநகர, போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தற்போது 14 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்கள் பலவற்றில் ஷேர் ஆட்டோ, ஷேர் காரும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

;