tamilnadu

img

பஞ்சமி நிலங்களை மீட்போம் நவ. 10ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட அறிவிப்பு மாநாடு

சிதம்பரம்:
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்ட அறிவிப்பு மாநாடு நவம்பர் 10 அன்று திருவள்ளூரில் நடத்துவதென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில குழு கூட்டம் அக்டோபர் 20 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. மாநில சிறப்பு தலைவர் பி.சம்பத், மாநிலத்தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், பொருளாளர் இ.மோகனா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.தமிழகத்தில் தொடர்ந்து பஞ்சமி நில மீட்புப் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வருகிறது. பஞ்சமி நிலங்கள் தற்போது நிபந்தனைகள் மீறப்பட்டதாக மட்டுமல்லாமல், பெரும்பாலான பஞ்சமி நிலங்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடமும்,பண்ணைகளாகவும் உள்ளன.எனவே மாவட்ட, வட்ட அளவிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறார்கள். பஞ்சமி நில விதிமீறல் பிரச்சனைகளில் தமிழக அரசே தலையீடு செய்து பிரத்தியேகமான சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கையை அரசிடமும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக நவம்பர் 10 அன்று திருவள்ளூரில் “பஞ்சமி நிலம் போராட்ட அறிவிப்பு மாநாட்டை” தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது.

சட்டமன்றத்தில் சுவாமி சகஜானந்தர் படம்
தமிழக சட்டப்பேரவையில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவரும், தலித் மற்றும் ஏழை மக்களின் கல்வி உரிமைக்காக செயல்பட்டு வரும் நந்தனார் கல்விக் கழகத்தை அமைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தவருமான சுவாமி சகஜானந்தர் அவர்களின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.

நிர்வாகிகள்
தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளோடு வழக்கறிஞர் ஏ.சங்கரன், கே.ஆர். கணேசன் ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாகவும், வழக்கறிஞர் டி.மாதையன், என்.கலையரசன் ஆகியோர் மாநில செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

;