tamilnadu

img

மின் வாரியத்தில் கேங்மேன் பணி நியமனத்திற்கு நீதிமன்றம் தடை

தமிழக மின்வாரியத்தில் 17000 கள உதவியாளர் பதவியும் 8000 மேற்பட்ட கம்பியாளர் பதவியும், ஆக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர் பதவிகள் காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட மின் ஊழியர் மத்திய அமைப்பு தொடர்ச்சியாக வாரியத்தை வலியுறுத்தி வந்தது. பணி நியமனம் செய்யும் போது மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது. தமிழக மின்வாரியம் சமீபத்தில் 5000 பதவிகளை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டது. பதவிகளை நிரப்ப ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்காமல் கேங்மேன் என்ற புதிய பதவியை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கு உண்டான அறிவிப்பினை தன்னிச்சையாக வெளியிட்டது. இதை எதிர்த்து மின் ஊழியர் மத்திய அமைப்பு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு புதனன்று (27.03.2019) விசாரணைக்கு வந்தது. கடுமையான விவாதத்திற்குப் பின்னர் பணி நியமனத்திற்கான நடவடிக்கையில் இப்போதுள்ள நிலை தொடர வேண்டும் என்று தற்காலிக தீர்ப்பை அளித்து வழக்கை 08.04.2019 -க்கு தள்ளி வைத்துள்ளது. மின் ஊழியர் மத்திய அமைப்பு இந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின்வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த தொழிலாளர் களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு உண்டான ஏற்பாட்டையும் செய்ய உள்ளது என மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

;