tamilnadu

img

சபரிமலையில் பலத்த பாதுகாப்பு: நவ.16இல் நடை திறப்பு

 திருவனந்தபுரம், நவ.11- சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16 ஆம் தேதி மண்டல காலத்துக்கான நடைதிறக்கப்பட உள்ள நிலை யில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 5 கட்டங்களாக செய்யப்பட்டுள்ளன. அதன்படி சன்னிதானம், பம்பா, நிலைக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய 5 கட்டங்களில் 12,708 காவல்துறையினர் நிறுத்தப்பட உள்ளனர். கடந்த ஆண்டு நான்கு கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. வடக்கு மண்டல ஏடிஜிபி ஷேக் பரவேஸ் சாகிப் கண்கா ணிப்பில் தென் மண்டல ஐஜி பல்ராம்குமார் உபாத்யா யா, திருவனந்தபுரம் நகர காவல் ஆணையர் எம்.ஆர்.அஜித்குமார் இணை தலைமை ஒருங்கிணைப்பாளர்கள். டிஐஜிக்களான சஞ்சய் குமார், காளிராஜ் மகேஷ்குமார், பி.பிரகாஷ் ஆகியோர் துணை தலைமை ஒருங்கி ணைப்பாளர்கள். பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப் பட்டுள்ளார். அவசர தேவைக்காக ‘தண்டர்போல்ட்’ சிறப்பு அதிரடிப்படையின் ஒரு குழு மணியாறில் நிறுத்தப்படும். ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலில் இருந்து 20 கமான்டோக்கள் உட்பட 50 பேர் சன்னிதான வளாகத்தில் இருப்பார்கள். இதோடு விமான, கப்பல் படையினரும் தயாராக இருப்பர்.

மண்டல பூஜைக்காக 16ஆம் தேதி நடை திறக்கப்படும். டிசம்பர் 27 ஆம்தேதி மண்டல பூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும். மகர விளக்குக்காக மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கும். சந்தனக்குடம் ஜனவரி 11, மறுநாள் பேட்ட துள்ளல். மகர விளக்கு ஜனவரி 15. ஜனவரி 20இல் நடை அடைக்கப்படும்.  ஆராதனை மேலாண்மை, சட்டம் - ஒழுங்கு மேலாண்மை, சபரிமலை பிரச்சனைக்கான மேலாண்மை என மூன்று நிலைகளில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை உச்சநீதிமன்ற தீர்ப்பு, நீதிபதி ஹரிஹரன் நாயர் ஆணைய அறிக்கை, மத்திய உளவுத்துறை அறிவிப்புகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

;