tamilnadu

காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை

காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை

வியாபாரிகள் மறியல் சேலம், செப்.25- தலைவாசல் காய்கறி சந்தையில் சுங்க  கட்டண வசூல் செய்வதற்கான ஏலம் நடை பெற்ற நிலையில், காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச் சாட்டி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலையம் அருகில் காய்கறி சந்தை செயல் பட்டு வருகிறது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையாக கருதப்படும் சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வ தற்கான ஏலம் நீதிமன்ற உத்தரவின் படி நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழனன்று ஏலம் நடை பெற்றது. இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக் கள், காய்கறி சந்தையில் நூற்றுக்கும் மேற் பட்ட கடைகள் உள்ள நிலையில், முறை யான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ஆனால், காய்கறிகளை ஏற்றி வரும் லாரி களுக்கு 5000 ரூபாய் வரை சுங்க கட்ட ணம் வசூல் செய்யப்படுகிறது என குற்றம் சாட்டி வியாபாரிகள் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அப்பகு திக்கு வந்த தலைவாசல் போலீசார், நீதிமன்ற உத்தரவு படி ஏலம் நடைபெற்று வருவதாக வும், சாலை மறியலில் ஈடுபட வேண்டாம் என கேட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து காவல் துறை பாதுகாப்போடு ஏலம் நடைபெற்றது.