20 ஆவது நாளாக வீரியத்துடன் தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்
சேலம், செப் 6- அரசு போக்குவரத்துத் கழக தொழிலாளர்கள் மற் றும் ஓய்வு பெற்ற தொழி லாளர்கள் கடந்த 20 நாட் களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற போக்கு வரத்துத் தொழிலாளர்க ளின் பணப்பலன்களை தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கடந்த 20 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் புதிய பேருந்து நிலையம் மெய்யனூர் போக்குவரத்துப் பணி மனை முன்பு நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு, அரசு விரைவு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாநில நிர்வாகி மணிமுடி தலைமை ஏற்றார். போராட்டத்தை, அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைவர் சண்முகம், வட்ட கிளை செய லாளர் ஸ்ரீபதி, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க செயலாளர் கலைவாணன், அந்தோணி ஆகி யோர் போராட்டத்தில் பங்கேற்று பேசினார். போராட்ட நிதி இணை சிஐ டியு உதவித் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், போக்குவரத்து சங்க மண்டல பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரிடம் வழங்கினர். தருமபுரி இதேபோன்று, அரசு போக்குவ ரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பொது மேலாளர் அலுவலகம் முன்பு 20 ஆவது நாளாக காத்திருப்பு போராட் டம் நடைபெற்று வருகிறது.